சிங்கப்பூரிலிருந்து வீடியோ கால்; கணவனின் செயலால் உயிரை மாய்த்த மனைவி: பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு விபரீதம்

சிங்கப்பூரிலிருந்து வீடியோ கால்; கணவனின் செயலால் உயிரை மாய்த்த மனைவி: பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு விபரீதம்

சிங்கப்பூரில் இருந்த கணவரோடு வீடியோ காலில் ஏற்பட்ட தகராறில் கன்னியாகுமரியில் மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய்(33) கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக இருந்தார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகளும் உண்டு.

நேற்று இரவு செந்திலும், ஞான பாக்கியபாயும் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை நடந்திருக்கிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ஞானபாக்கியபாய் நேற்று இரவு தன் இருகுழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கணவர் செந்தில், வெகுநேரமாக ஞானபாக்கியபாய்க்கு போன் செய்தும் அவர் எடுக்காததால் தன் உறவினர்களுக்கு அழைத்து இதுபற்றித் தகவல் சொன்னார். உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் ஞானபாக்கியபாய் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப் வீடியோ காலில் கணவன், மனைவிக்குள் சண்டைவந்து பேரூராட்சி பணியாளர் உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in