அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

டெல்லி உயர் நீதிமன்றம்.
டெல்லி உயர் நீதிமன்றம்.அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு படையான முப்படைகளில் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்தது. ராணுவம், விமானப்படை, கடற்படை என மும்படையில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய எடுக்கப்பட்ட இந்த அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்தது.

ஆனாலும், இந்த திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் வேலையில் விமானப்படை, ராணுவம், கடற்படை என மும்படைகளும் களமிறங்கின.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தேச நலனுக்காகவும், பாதுகாப்பு படையை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், இத்திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in