எஸ்.ஐ கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர்: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி

எஸ்.ஐ கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்ட காவலர்: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவர் அந்த காவல் நிலைய உதவி ஆய்வாளரின் கையெழுத்தை போலியாக போட்டு பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில்  காவலராக பணியாற்றி வந்தவர் செல்வராஜ். மணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு  சான்று ஆவணங்கள், செல்போன்கள் போன்றவற்றை தவறவிட்டவர்கள் புகார் அளிக்க வரும்போது அவர்களிடம்  செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் காவல் உதவி ஆய்வாளர் அருண் என்பவரது  கையெழுத்தை போலியாக போட்டு காவலர் செல்வராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இது குறித்து மண்ணச்சநல்லூர்  காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை செய்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,  காவலர் செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து  உத்தரவிட்டார். காவலர் செல்வராஜ் லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது மீன் வியாபாரியை தாக்கி மீன்களை வீட்டிற்கு எடுத்துச் சென்ற புகாரில்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in