ஆதிச்சநல்லூரில் முதன் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழைய இரும்புப் பொருள்கள்!

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிப் பகுதி
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிப் பகுதி

ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பழைய இரும்புப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். இங்கு மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்துவருகி றது. இங்கு தொடர்ந்து கிடைந்துவரும் பொருள்களால் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், தொன்மம், தனிச்சிறப்பு ஆகியவை வெளிப்பட்டு வருகிறது.

இப்போது அகழ்வாராய்ச்சி நடந்துவரும் குழியில் இருந்து 160 செ.மீ நீளமுள்ள இரும்பால் செய்யப்பட்ட ஆயுதம் கிடைத்துள்ளது. அதேகுழியில் இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிப் பணிகளில் முதன்முறையாக இரும்பால் செய்யப்பட்ட பாத்திரம் கிடைத்துள்ளது. இந்த இரும்புப் பாத்திரத்தில் நெல் உமிகளும் ஒட்டியிருந்தன. அதேபோல் ஆதிச்சநல்லூரில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை 90 முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in