கோவா முந்திரி தோட்டத்தில் கிடைத்த புதையல் பானை: அரசிடம் ஒப்படைத்த தொழிலாளி!

செப்புக் காசுகள்
செப்புக் காசுகள்

கோவாவில் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று அடையாளம் தெரியாத 826 செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவின் சத்தாரி என்ற இடத்தில் உள்ள முந்திரி தோட்டத்தை அகற்றும் பணியில் சக தொழிலாளர்களுடன் விஷ்ணு ஜோஷி என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மரத்துக்கு அடியில் மண்பானை ஒன்று தென்பட்டுள்ளது. அதை அவர் திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான செப்புக் காசுகள் இருந்தது. அதை எடுத்து எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 826 காசுகள் இருந்தன.

இதையடுத்து  வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  அவர்கள் அந்த செப்புக் காசுகளை தொல்லியல் துறை அமைச்சர் சுபாஷ் பால்தேசாயிடம் ஒப்படைத்தனர். "நாணயங்களை ஒப்படைத்த ஜோஷிக்கு அரசாங்கம் உரிய வெகுமதியும் மரியாதையும் வழங்கும். அந்த நாணயங்களின் தோற்றம் மற்றும் வரலாற்றுச் சூழலை ஆராய வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும்" என்று பால்தேசாய்  தெரிவித்துள்ளார்.

செப்புக் காசுகள் கிடைத்த முந்திரிக்காடு
செப்புக் காசுகள் கிடைத்த முந்திரிக்காடு

நிபுணர்கள் குழுவின் ஆய்வுக்கு பின்னரே  இந்த பழங்கால செப்பு நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தது அதனுடைய மதிப்பு எவ்வளவு என்பதெல்லாம் தெரிய வரும். ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ்வளவு செப்பு  நாணயங்கள்,  உள்ளூர் மக்களிடையே  பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in