இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியது எப்படி?.. கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை : அதிர்ச்சி தகவல்

இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியது எப்படி?..  கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை : அதிர்ச்சி தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, சந்தேகத்திற்கிடமான சுரங்கப்பாதை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் கடந்த 22- ம் தேதி ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் சட்டவிரோத சுரங்கப்பாதைகள் மூலம் சம்பா மாவட்டத்த்திற்குள் ஊடுருவி இருக்க கூடும் என கணித்த அதிகாரிகள் எல்லையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பா மாவட்டத்தில் சிறிய அளவில் நிலத்தடியில் இருந்த பள்ளம் ஒன்று சுரங்கப்பாதையாக சென்றது கண்டறியப்பட்டது. இந்திய எல்லையில் இருந்து 900 மீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் எல்லைக் கோட்டில் இருந்து 150 மீட்டர் இடைவெளியிலும் இந்தச் சுரங்கப்பாதை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட 15 நாளுக்குப் பின் இந்த சுரங்கப்பாதை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in