சொத்துவரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பு கட்: அதிரடியில் இறங்கிய மாநகராட்சி

திருநெல்வேலியில் சொத்து வரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருநெல்வேலியில் சொத்து வரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்புசொத்துவரி கட்டாத வீடுகளில் குடிநீர் இணைப்பு கட்: அதிரடியில் இறங்கிய மாநகராட்சி

திருநெல்வேலி மாநகராட்சியில் சொத்துவரி, தண்ணீர் கட்டண வரி செலுத்தாத பத்து வீடுகளின் குடிநீர் இணைப்பை இன்று அதிரடியாகத் துண்டித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிகளின் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்திற்காகவும், தூய்மைப்பணி, தெருவிளக்கு பொருத்துதல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காகவும் சொத்துவரி, குடிநீர் கட்டண வரி ஆகியவை வசூலிக்கப்படுகின்றன.

இதற்கென மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் பல இடங்களிலும் வரி வசூல் மையங்களும் உள்ளன. சொத்து, தண்ணீர் வரியை முறையாகக் கட்டக்கோரி அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வந்தாலும் சிலர் அதைப் பின்பற்றுவதில்லை. இந்நிலையில் சொத்துவரி, தண்ணீர் வரி பாக்கி தொடர்பாக பலமுறை அறிவுறுத்தியும் கட்டாத பத்து வீடுகளின் குடிநீர் இணைப்பை நெல்லை மாநகராட்சி இன்று துண்டித்தது.

இதுகுறித்து ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாளையங்கோட்டை மண்டலத்தில் மூன்று வீடுகள், மேலப்பாளையம் மண்டலத்தில் இரு வீடுகள் உள்பட பத்து வீடுகளின் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது. வரி கட்டுபவர்களின் நலனுக்காக வரும் மார்ச் 31-ம் தேதிவரை சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலு வரி வசூல் மையங்கள் செயல்படும். கட்டாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு தொடரும் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in