வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் தமிழகம்: மாவட்டந்தோறும் வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி!

வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் தமிழகம்:  மாவட்டந்தோறும் வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள அபாய ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் நோக்கில் விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவ மழையின் போது தமிழகத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்படும். வெள்ள அபாயங்களை சமாளிக்கும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. மழைக்காலங்களில் வெள்ள அபாயம் குறித்த தகவல் பரிமாற்றம், தகவல்களைப் பெறுதல், அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதிப்புகளை தடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்கான ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in