`நண்பர்களை பார்க்கச் செல்கிறேன்'- பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கொலை?

கொலை
கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாற்றுத்திறனாளி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளையம் அருகில் உள்ள மலையான்பட்டியைச் சேர்ந்தவர் சிங்கமுத்து(47). மாற்றுத்திறனாளியான இவர் கூலிவேலை செய்து வந்தார். திருமணம் ஆகாத நிலையில் இவர் தன் பெற்றோருடன் வசித்துவந்தார். நேற்று இரவு சின்ன ஓவுலாபுரம் சாலையில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு தான் வழக்கமாகச் சந்திக்கும் நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களைப் பார்க்கச் செல்வதாகவும் சொல்லிச் சென்றார். ஆனால் அதன் பின்பு சிங்கமுத்து வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இன்றுகாலையில் அவரைத் தேடி குடும்பத்தினர் சென்றனர். அப்போது அங்கு சிங்கமுத்து பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். ராயப்பன்பட்டி போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிங்கமுத்து அதே இடத்தில் அவரது நண்பர்களுடன் அடிக்கடி மது குடித்து வந்தது தெரியவந்தது. இதனால் மதுபோதையில் ஏற்பட்டத் தகராறில் அவர் சக நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே சிங்கமுத்துவின் நண்பர்களும் மாயமாகினர். சிங்கமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in