11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு  அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதிய 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை செப்டம்பர் 15-ம் தேதி முதல் பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,, கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் ஒரிஜினல் சான்றை செப்டம்பர் 15-ம் தேதியில் இருந்து பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக தற்காலிகச் சான்று மாணவர்களுக்கு வழங்ப்பட்டது. அதனைக் கொண்டு மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in