கழுத்தில் கத்திக்குத்து: பேருந்து நிலையத்தை பதறடித்த மர்ம மரணம்

கொலை
கொலை

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் நத்தம் பேருந்துகள் நிறுத்துமிடத்தில், இளைஞர் ஒருவரின் சடலம் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் கிடந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். 

போலீஸார் விசாரணையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் குத்தி கொல்லப்பட்டு கிடந்தவர், நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் பகுதியைச் சேர்ந்த அஜித் (28) என தெரிய வந்தது. பேருந்து நிலையம் அருகிலிருக்கும் ஆரோக்கிய மாதா நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறு ஒன்றில், கழுத்தில் விழுந்த கத்தி  குத்துடன் தப்பி வந்த அஜித் திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்குள் வந்து இறந்துள்ளது தெரிய வந்தது.


அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் அஜித்தை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளி பிடிபட்டதும் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in