பைக்குகள் நேருக்கு நேர் மோதல்... பறிபோன சிறைக் காவலரின் உயிர்: பணி முடிந்து வீடு திரும்பியபோது சோகம்

உயிரிழந்த பால்பாண்டி
உயிரிழந்த பால்பாண்டி

திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகன் பால்பாண்டி (27). இவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சிறுநாயக்கன்பட்டியிலிருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் குண்டல்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, இருவரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பால்பாண்டி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நிலக்கோட்டை நேரு நகரைச் சேர்ந்த மதன் பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த பால்பாண்டிக்கு காயத்ரி என்ற மனைவியும் ஐந்து மாத ஆண் குழந்தையும் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in