திண்டுக்கல்- கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: நாளை முதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்

திண்டுக்கல்- கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: நாளை முதல் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்

திண்டுக்கல்- கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில் நாளை (ஜன.13) முதல் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை, ஈரோடு, திருப்பூர் பயணிகள் இணைப்பு ரயில்களில் சென்று திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு அதிவிரைவாக செல்லலாம்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பணிபுரிவோர்  பொங்கல் பண்டிகையையொட்டி, தற்போது சொந்த ஊர் திரும்பி வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்திலும் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தன. இதனால், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, நாளை (ஜன.13) முதல் 18-ம் தேதி வரை திண்டுக்கல்-கோவை இடையே இரு வழித்தடங்களிலும் முன்பதிவில்லா சிறப்பு கட்டண பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் (வண்டி எண் 06077) கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் வந்தடையும். மறு வழித்தடத்தில் (வண்டி எண் 06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ரயில் ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகிறது. இதில் இரண்டாம் வகுப்பு 10 பொதுப்பெட்டி, 2 பார்சல் பெட்டி இணைக்கப்படுகிறது. .  

மதுரையில் இருந்து 12:35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு திண்டுக்கல் செல்லும் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்16128) மதுரை பயணிகள்  இங்கிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பும். திண்டுக்கல்- கோவை சிறப்பு ரயில் மூலம் கோவைக்கு பயணிக்கலாம். இதேபோல் ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்16321) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் சென்று, அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை சென்று விட இந்த ரயில் வசதியாக அமைகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in