யுபிஐ பரிவர்த்தனைகள் முடங்கியது... பயனர்கள் அதிர்ச்சி!

யுபிஐ சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி
யுபிஐ சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் சர்வர்கள் முடங்கியதால், யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிக்கல் நிலவி வருவதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் யுபிஐ எனப்படும் ஸ்கேன் செய்து வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தும் முறை தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ரூபாயில் துவங்கி, அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

கூகுள் பே, பேடிஎம், போன்பே, பிம் யுபிஐ உள்ளிட்ட செயலிகள் மூலமாக இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது இந்த வகை பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக சமீபத்தில் கூட மத்திய அரசு பெருமிதத்துடன் தெரிவித்திருந்தது.

பெரும்பாலான யுபிஐ பேமெண்டுகள் நடைபெறவில்லை என புகார்
பெரும்பாலான யுபிஐ பேமெண்டுகள் நடைபெறவில்லை என புகார்

சில்லறை விற்பனை கடைகள் மற்றும் தெருவோர கடைகளில் கூட தற்போது இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் பெருமளவில் சில்லறை தட்டுப்பாடு நிலை வரும் நிலையில், இந்த யுபிஐ பேமென்ட்கள் பெரும்பாலானவர் களுக்கும் கை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் வங்கிகளின் செயலிகள் மற்றும் யுபிஐ செயலிகள் செயல்படவில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.

குறிப்பாக, ஹெச்டிஎஃப்சி பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மகேந்திரா பேங்க் ஆகியவற்றின் யுபிஐ பரிவர்த்தனைகள் முழுமை பெறாமல் இருப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு பயனர்களும் அந்தந்த வங்கிகளின் சமூக வலைதள பக்கங்களை டேக் செய்து இது தொடர்பான புகார்களை அளித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை வங்கிகள் தரப்பிலோ அல்லது யுபிஐ நிறுவனங்களின் தரப்பிலோ எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை.

குறிப்பாக, யுபிஐ-க்கான ஒழுங்குமுறை ஆணையமான நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) இந்த தகவலை உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. இது தொடர்பான தகவல்களும் வெளியிடப்படாததால் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

வங்கிகளின் சமூக வலைதள கணக்குகளை டேக் செய்து பயனர்கள் புகார்
வங்கிகளின் சமூக வலைதள கணக்குகளை டேக் செய்து பயனர்கள் புகார்

இந்த நிலையில், இன்று காலை முதல் இந்த பிரச்சினைகள் சீரடைந்து விட்டதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை இன்னும் சீராகவில்லை என பயனர்கள் இப்போது வரைக்கும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எதனால் இந்த திடீர் தேக்கம் ஏற்பட்டது என்பதற்கான விளக்கத்தை வங்கிகள் தரப்பில் தெரிவிக்க வேண்டும் எனவும் பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in