மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்: மணமக்களின் புதிய முயற்சி வைரல்!

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்: மணமக்களின் புதிய முயற்சி வைரல்!

எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத் திருமணங்களுக்கு ஆடம்பர செலவு செய்வது வழக்கமாக இருக்கிறது. தங்களது பொருளாதாரத்தைக் கூட பொருட்படுத்தாமல் திருமணத்திற்குக் கோடிக்கணக்கில் செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வார்கள். விருந்து, மணமக்கள் அழைப்பு, அழைப்பிதழ் என அனைத்திலும் புதுமையைக் கையாள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாத்திரை அட்டை வடிவில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் எழிலரசன். இவரது தந்தை அதே பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வசந்தகுமாரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் திருமணத்திற்காக மாத்திரை அட்டை போல இவர்கள் அச்சிட்டுள்ள அழைப்பிதழ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாத்திரை அட்டையின் பின்புறம் இடம்பெற்றிருக்கும் மருந்து பெயர், டோஸ் அளவு, காலாவதி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்களைப் போலத் திருமணம் குறித்த தகவல்கள் பதிவிட்டுள்ளார்கள். மேலும், அன்றைய தினம் தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது என்ற பொது அறிவு தகவலும் இடம் பெற்றுள்ளது. எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள், உறவினர்கள் தவறாமல் வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in