துப்பாக்கியால் சுட்ட டீசல் திருடர்கள்: சுருண்டு விழுந்து இறந்து போன பெட்ரோல் பங்க் மேலாளர்

துப்பாக்கியால் சுட்ட டீசல் திருடர்கள்: சுருண்டு விழுந்து இறந்து போன  பெட்ரோல் பங்க் மேலாளர்

உத்தரப்பிரதேசத்தில் டீசல் திருட்டை தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் மேலாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் டீசலுடன் டிரக் இன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அருகில் இருந்த பெட்ரோல் பல்க் மேலாளர் சுஷில்குமார், மற்றும் 2 ஊழியர்கள் இருந்துள்ளனர்.

அப்போது சிலர் சந்தேகத்திற்கு இடமான முறையில் டிரக்கைச் சுற்றி சுற்றி வந்துள்ளனர். அதை சுஷில்குமார் கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போது டிரக்கில் இருந்து அவர் டீசல் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பார்த்த சுஷில்குமாரும், பெட்ரோல் பல்க் ஊழியர்களும் தடுக்க முயன்றனர். ஆனால், டீசல் திருடியவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சுஷில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ராஜ்குமார் தெரிவித்தார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in