சென்னையில் தொடரும் டீசல் தட்டுப்பாடு: மாசுக்கட்டுப்பாடு வாரியம் காரணமா?

சென்னையில் தொடரும் டீசல் தட்டுப்பாடு: மாசுக்கட்டுப்பாடு வாரியம் காரணமா?

சென்னையில் இரண்டாவது நாளாக பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் இல்லை என நேற்று பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிலை இன்றும் தொடர்கிறது. இதனால் டீசல் போட முடியாமல் வாகனங்கள் வேறு பெட்ரோல் நிலையங்களைத் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய வணிக வாகனங்களுக்கு டீசல் தேவைப்படும் நிலையில், திடீரென சென்னையில் டீசல் பற்றாக் குறை ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 70 சதவீத கச்சா எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டதால் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் மற்ற எண்ணெய் நிறுவனங்களிலும் டீசலுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in