
தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100க்கும் அதிகமாக தான் அனைத்து மாநிலங்களிலும் விற்பனையாகி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ரூபாய் 100 விட கொஞ்சம் குறைவான விலையில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகவே மக்கள் பலர் கருதுகின்றனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 22ம் தேதிக்கு பிறகு இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் அடுத்த மாற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
இந்நிலையில் வரும் 12ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மக்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் மற்றும் ஆய்வுப் பணிகளை செய்ய தற்போது மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதையடுத்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் மத்திய அரசு பெட்ரோல் மீதான விலையில் ரூபாய் 5ம், டீசல் விலையில் ரூபாய் 10-ம் குறைத்து அறிவித்தது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் கலால் வரியை குறைத்து இந்த விலை குறைவை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தீபாவளி பரிசாக மீண்டும் கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதனால் இந்த தீபாவளிக்கு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 10 குறைய வாய்ப்புள்ளது.
தற்போது மத்திய அரசு அதன் கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ரூபாய் 100க்கு விற்பனையாகும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 90ஆக குறையும் வாய்ப்புள்ளது. இதனால் சராசரி மற்றும் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை! 2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!