‘பத்து தல’ படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறினாரா சிம்பு?

‘பத்து தல’ படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறினாரா சிம்பு?

நடிகர் சிலம்பரசன் தற்போது ‘பத்து தல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் பற்றிய வதந்திக்கு இயக்குநர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

‘மஃப்டி’ என்ற கன்னட படத்தின் ரீமேக் தான் ‘பத்து தல’. ஒபெலி என். கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். கர்நாடகாவில் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் அதில் இருந்து சிம்பு பாதியிலேயே வெளியேறிவிட்டார் என செய்தி சமீபத்தில் பரபரப்பாக பரவியது. சட்டையை கழற்றி நடிக்க சொன்னதற்காக சிம்பு ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிவிட்டார் என தகவல்கள் வெளியானது.

சிம்பு சமீப காலமாக எந்த சர்ச்சையில் சிக்காமல் இருக்கும் நிலையில், தற்போது இப்படி ஒரு செய்தி வந்தது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இந்நிலையில் இது குறித்து படத்தின் இயக்குநர் ஒபெலி என்.கிருஷ்ணா ட்விட்டரில் இது வதந்தி என விளக்கம் கொடுத்து இருக்கிறார். "தயவுசெய்து வதந்தி பரப்பாதீர்கள். எதிர்பார்த்ததை விட சிம்பு சிறப்பாக நடித்து கொண்டிருக்கிறார். நான் பர்சனல் ஆக அவர் நடிப்பை என்ஜாய் செய்து வருகிறேன். திரையில் பார்க்கும் போது அது எல்லோருக்கும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in