15 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி தேர்தல் களத்துக்கு திரும்பும் மத்திய அமைச்சர்... ஒடிசாவில் அனல் அரசியல்!

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

ஒடிசா மாநிலம், சம்பல்பூர் தொகுதியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார். அவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் மூலம் மீண்டும் நேரடி போட்டிக்கு திரும்பியுள்ளார்.

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் போட்டி
சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் போட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் தர்மேந்திர பிரதான். இவருக்கு மேற்கு ஒடிசாவின் மையப்பகுதியான சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது. இதன் மூலம் இவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் கடைசியாக கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த ஆண்டில் தான் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்தது.

முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டில் ஒடிசா சட்டப் பேரவைக்கும், 2004ல் தியோகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கும் தர்மேந்திர பிரதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 2012ம் ஆண்டில் பீகாரில் இருந்தும், மீண்டும் 2018ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பூரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பூரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் தர்மேந்திர பிரதானுக்கு அக்னிப்பரீட்சையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, பிஜு ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படாததால் இருகட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.

இதன் காரணமாக நட்சத்திர வேட்பாளரான தர்மேந்திர பிரதான் வெற்றி பெறுவதற்கு கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்று தர்மேந்திர பிரதான் இன்று வழிபட்டார். அவருடன் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவும் உடன் சென்றார். சம்பித் பத்ரா, பூரி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in