வைரலான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாடல்: சிறுமியை நேரில் அழைத்து ஆச்சரியப்படுத்திய டிஜிபி

வைரலான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாடல்: சிறுமியை நேரில் அழைத்து ஆச்சரியப்படுத்திய டிஜிபி

கானா பாடல் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்து வரும் சிறுமியை நேரில் அழைத்து டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சமீபகாலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறுமி ஒருவர் பாடிய கானா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வந்தது. இந்த வீடியோவை பார்த்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அந்த சிறுமி குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருந்தார். இந்நிலையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கானா பாடலை பாடிய இளங்குயிலை கண்டுபிடித்து விட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கானா பாடலை பாடிய 13 வயது சிறுமி ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். மேலும் சிறுமியிடம் அவரது படிப்பு மற்றும் வருங்கால கனவு குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிறுமியை கானா பாடலை கேட்டு மகிழ்ந்த டிஜிபி, இதேபோல் சாலை பாதுகாப்பு குறித்த பாடலை தொடர்ந்து பாடுமாறு கேட்டுக்கொண்டதுடன் அவரை வாழ்த்தி அனுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in