சதுரகிரி மலையேறிய பக்தர் மாரடைப்பால் மரணம்

சதுரகிரி மலையேறிய பக்தர் மாரடைப்பால் மரணம்

விருதுநகர் மாவட்டம், சதுரகிரிக்கு யாத்திரை சென்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த பக்தர் யாத்திரையின் போதே மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அமாவாசையை ஓட்டி நான்கு நாள்களும், பவுர்ணமியை ஒட்டி நான்கு நாள்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி முதல் இன்று 22-ம் தேதிவரை தை அமாவாசையை முன்னிட்டு 4 நாள்களுக்கு சதுரகிரி யாத்திரை செல்லலாம் என அனுமதிக்கப்பட்டது. இதில் பிரதோஷ வழிபாடும், நேற்று தை அமாவாசை வழிபாடும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி யாத்திரை சென்றனர்.

கோயம்புத்தூர் சாய்பாபா காலனியைச் சேர்ந்த சிவகுமார்(48) என்பவரும் யாத்திரைக்கு வந்திருந்தார். இவர் சதுரகிரி யாத்திரையின் ரெட்டை சிவன் அருகே சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் யாத்திரையின் போதே உயிர் இழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சதுரகிரி யாத்திரைக்கு வந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in