விரிவான திட்ட அறிக்கை தயார்: உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே!

விரிவான திட்ட அறிக்கை தயார்: உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே!

தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தடங்களில் உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து டெல்லி, மும்பை, பிஹார், மேற்குவங்கம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ரயில்களின் எண்ணிக்கையை குறைவு தான். அதே நேரத்தில் சில ரயில்கள் விரைவு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. இதே போல் மும்பைக்கு இயக்கப்பட்டு வரும் ரயிலும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் தான் நின்று செல்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு அண்மையில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் குறிப்பிட்ட நேரத்தில் மைசூர் சென்றடைவதால் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்து வருகிறது. அதேபோல் டபுள் டக்கர், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தடங்களில் உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முக்கியமாக வந்தே பாரத் ரயில் இயங்கும் வழித்தடத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை, தெற்கு ரயில்வே சமர்பித்துள்ளது. இதேபோல், சென்னை - கூடூர், சென்னை- ரேணிகுண்டா வழித்தடத்திலும் 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான திட்ட அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் - மங்களூரு வழித்தடத்திலும் 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in