வேலை பார்க்கிறேன்; திருமணம் செய்து வையுங்கள்: விரக்தியில் 19 வயதில் உயிரை மாய்த்த பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்

தற்கொலை
தற்கொலைவேலை பார்க்கிறேன்; திருமணம் செய்து வையுங்கள்: விரக்தியில் 19 வயதில் உயிரை மாய்த்த பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்

19 வயதாகியும் தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்னும் விரக்தியில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்தப் பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(43). இவர் கன்னியாகுமரி மாவட்டம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவர் இதற்காக குமரி மாவட்டம், சாங்கை பகுதியில் வீடு எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் இவரது மனைவியின் தம்பி சரவணகுமார்(19) என்பவரும் தங்கி இருந்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

சரவணகுமார் கடந்த சில வாரங்களாகவே தனக்கு 18 வயது தாண்டிவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் வேலையும் பார்க்கிறேன். சம்பளம் வருகிறது. எனவே எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் என தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். அதற்குக் குடும்பத்தினர் 19 வயதுதானே ஆகிறது. கொஞ்சம் பொறுமையாக இரு என அறிவுரையும் சொல்லி வந்தனர். ஆனால் அதைக் கேட்காமல், திருமணம் செய்துவைக்காத விரக்தியில் வீட்டு அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சரவணகுமார்.

மார்த்தாண்டம் போலீஸார் விரைந்துவந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத வாலிபர்களே நம்பிக்கையுடன் காத்திருக்கும் சூழலில், 19 வயதிலேயே திருமண ஆசைப்பட்ட வாலிபரின் சோகமுடிவு அப்பகுதி மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in