எங்கள் மகள் மரணத்தில் மர்மம் உள்ளது: துணைவட்டாட்சியர் மனைவி மரணத்தில் சந்தேகத்தை எழுப்பும் பெற்றோர்

எங்கள் மகள் மரணத்தில் மர்மம் உள்ளது: துணைவட்டாட்சியர் மனைவி மரணத்தில் சந்தேகத்தை எழுப்பும் பெற்றோர்

காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சங்கீதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். துணை வட்டாட்சியர் சதீஷ் குடும்பத்துடன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வந்தார். சதிஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, சங்கீதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சதீஷ், அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் பெற்றோர் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமான 6 ஆண்டுகளில் சங்கீதா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in