
பள்ளிக்கட்டணம் செலுத்தாத காரணத்தால் தேர்வு எழுத அனுமதிக்காததால் மனமுடைந்து 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். 1 4 வயதான இவரது மகள் உள்ளூர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பள்ளிக்கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தால் அந்த மாணவியைத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் நேற்று அனுமதிக்கவில்லை .
இதனால் அந்த மாணவி மனம் நொந்த நிலையில், வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், அனைவரும் உறங்கிய பின்பு வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் தங்களது மகள் தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தங்களது மகள் இறப்பிற்கு தனியார் பள்ளி நிர்வாகம் தான் காரணம் என சிறுமியின் பெற்றோர் குற்றம் ச ட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அசோக்குமார் கூறுகையில், "என் மகள் உள்ளூர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். நிதி நெருக்கடிகளால், அவளது பள்ளிக் கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் எனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்து என் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்று கூறியுள்ளார். இப்புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ராகுல் பாடி தெரிவித்துள்ளார்.