கரோனா மிரட்டலுக்கு இடையே நாகர்கோவிலில் டெங்கு அறிகுறி: மாநகராட்சி அலர்ட்

கரோனா மிரட்டலுக்கு இடையே நாகர்கோவிலில் டெங்கு அறிகுறி: மாநகராட்சி அலர்ட்

சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீனா, ஐப்பான் உள்ளிட்ட ஆறுநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் சத்தமின்றி டெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் தென்படத் தொடங்கியுள்ளன. இதனால் கரோனா விழிப்புணர்வோடு, டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வுப் பணியையும் கையில் எடுத்துள்ளது நாகர்கோவில் மாநகராட்சி.

இதுதொடர்பாக நாகர்கோவில் மாநகர் நல அதிகாரி ராம்குமார் கூறுகையில், “நாகர்கோவில் மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 50 வீடு என்னும் அடிப்படையில் 328 பணியாளர்கள், இந்தப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வருவோர் வீட்டுத்தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது தொடர்பாகவும் கண்காணித்து வருகிறோம். காய்ச்சல் அறிகுறி இருப்போருக்கு டெங்குப் பரிசோதனை மட்டும் செய்யப்படுகிறது. இப்போது கரோனா பரிசோதனை அவர்களுக்குச் செய்வதில்லை. அரசு உத்தரவிட்டால் அதையும் செய்வோம்.

குமரியில் இப்போது கடுமையான பனி வீசுகிறது. இந்நேரத்தில் சளி பிடிக்காமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பனிநேரத்தில் கரோனா வந்தால் மிகுந்த சிரமத்தைத் தரும் என்பதால் அதுகுறித்தும் மக்களிடம் விளக்கிக் கூறிவருகிறோம் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in