விவேகானந்தரை ’முந்திய’ வீர் சாவர்க்கர்

டெல்லி பல்கலை. புதிய கல்லூரிகள் பெயர் தேர்வு
விவேகானந்தரை ’முந்திய’ வீர் சாவர்க்கர்
டெல்லி பல்கலைக்கழகம்

டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் தொடங்கப்பட உள்ள புதிய கல்லூரிகளுக்கான பெயர் தேர்வில் வீர் சாவர்க்கர், சுஸ்மா ஸ்வராஜ் ஆகியவை இறுதிச் சுற்றில் வென்றுள்ளன.

முன்னதாகப் புதிய கல்லூரிகளுக்கான பெயர் பரிசீலனையில், அடல் பிஹாரி வாஜ்பேயி, சர்தார் படேல், சுவாமி விவேகானந்தர், சாவித்திரி பாய் பூலே, அருண் ஜெட்லி என 10-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் இறுதிச் சுற்றில் படேல், சாவர்க்கர், சுஸ்மா ஸ்வராஜ், வாஜ்பேயி உள்ளிட்ட பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முடிவாக, சுதந்திரப் போராட்டக் காலத்து இந்து மகாசபையின் தலைவராக இருந்த வீர் சாவர்க்கர் மற்றும் பாஜக தலைவர்களில் ஒருவரான, மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் பெயர்கள், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் இறுதி செய்யப்பட்டன.

அண்மையில் நடந்து முடிந்த இந்தப் பெயர் பரிசீலனையை அடுத்து, தற்போது கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in