
டெல்லி அரசுப் பள்ளிகளில் மாணவர் திறன் மேம்பாட்டுக்கான 6 கட்டாய தொழிற்படிப்புகள் எதிர்வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகின்றன.
மாணவர் மத்தியிலான திறன் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் இந்த தொழிற்படிப்புகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. தகவல் தொழில்நுட்பம், நிதி சந்தை, உணவு உற்பத்தி, சந்தை மற்றும் விற்பனை நுட்பங்கள், அழகு மற்றும் ஆரோக்கியம், தரவு அறிவியல் என 6 தொழிற்படிப்புகளில் மாணவர் தாம் விரும்பிய ஒன்றினை கட்டாயம் தேர்வு செய்து படித்தாக வேண்டும்.
2023-24 கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அரசு பள்ளிகளில் அமலுக்கு வருகிறது. 9 மற்றும் அதற்கு மேலான வகுப்புகளில் இந்த தொழிற்பாடங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. மாணவர் மத்தியிலான திறன்களை ஊக்குவித்து வளர்க்கும் வகையிலும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த புதிய தொழிற்படிப்புகள் அமைந்திருக்கும் என டெல்லி பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.