33 வார கருவை கலைக்க மருத்துவர்கள் மறுப்பு: நீதிபதிகள் அளித்த அதிரடி தீர்ப்பு!

33 வார கருவை கலைக்க மருத்துவர்கள் மறுப்பு: நீதிபதிகள் அளித்த அதிரடி தீர்ப்பு!

33 வார கருவை கலைக்க பெண்ணிற்கு அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் தனது வயிற்றில் 33 மாத கருவை சுமந்து வந்துள்ளார். அப்போது அவர் மருத்துவமனையில் சோதனை செய்தபோது பெருமூளை காரணமாக கரு பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கருவை கலைக்க முடிவு செய்தார். ஆனால் மருத்துவ சட்டத்தின் படி 24 வாரத்திற்குள் தான் கருக்கலைப்பு செய்ய முடியும். ஆனால் அவருடைய கரு 24 மாதத்தை கடந்து விட்டதால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து அந்த பெண் தனது 33 மாத கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கருவை கலைக்க அனுமதி அளித்ததோடு, ஒரு கர்ப்பிணி பெண் தனது கருவை கலைக்கும் உரிமை உலகமெங்கும் விவாத பொருளாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது சட்டத்தில் இந்த விஷயத்தில் பெண் தேர்வு செய்து கொள்ளும் உரிமையை அளிக்கிறது. எதிர்பாராத விதமாக கருவை கலைத்துக் கொள்ளும் பெண்ணிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இறுதி முடிவு எடுக்கும் தாயின் விருப்பத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in