இந்த வருடமும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை... மாநில அரசு முக்கிய முடிவு!

பட்டாசு வெடிக்கத் தடை
பட்டாசு வெடிக்கத் தடை

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் 4வது ஆண்டாக பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் அருகாமை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பது, டீசல் வாகனங்களின் பயன்பாடு, தொழிற்சாலை மாசு ஆகியவற்றால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

காற்று மாசு அளவு 50க்கும் குறைவாக இருப்பதே நல்லது எனும் நிலையில், இந்த குறியீடு தற்போது 300ஐ கடந்து மிகவும் மோசம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதின் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.

காற்று மாசு 300 அளவிற்கு நிலவுகிறது
காற்று மாசு 300 அளவிற்கு நிலவுகிறது

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததின் காரணமாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

4வது ஆண்டாக இந்த ஆண்டும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனிடைய ஹரியானா மாநிலத்தில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதையும் தடை செய்ய வேண்டும் என டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்டை மாநிலங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிக்கை
அண்டை மாநிலங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரிக்கை

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மாலையில் பட்டாசு வெடிக்கலாம் என்று முன்பு அளித்த அனுமதியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி எல்லையை ஒட்டியுள்ள உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா புறநகர் பகுதிகளிலும் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என அம்மாநில அரசுகளை டெல்லி அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in