நம்பிச் சென்ற இளம்பெண்... நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: பிறந்தநாளுக்கு சென்றபோது விபரீதம்

நம்பிச் சென்ற இளம்பெண்... நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: பிறந்தநாளுக்கு சென்றபோது விபரீதம்

பிறந்தநாளைக்கு அழைத்து இளம்பெண்ளை ரயில் நிலையத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்தவர் ஊர்மிளா (பெயர் மாற்றம்). கணவரை பிரிந்து வாழும் இவருக்கு ரயில்வேயில் பணி புரியும் சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வேலை வாங்கித் தருவதாக ஊர்மிளாவிடம் கூறியுள்ளார் சதீஷ்குமார். இதனிடையே, தனது பிறந்த நாளுக்கு வரும்படி ஊர்மிளாவை அழைத்துள்ளார் சதீஷ்குமார்.

நம்பிச் சென்ற ஊர்மிளாவை, ரயில் நிலைய தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்து சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து ஊர்மிளா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டெல்லி ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in