சொத்து பத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டது பெயர்: ஆவேசத்தில் தந்தை, சகோதரிகளைக் கொடூரமாக கொன்ற வாலிபர்

சொத்து பத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டது பெயர்: ஆவேசத்தில் தந்தை, சகோதரிகளைக் கொடூரமாக கொன்ற வாலிபர்

உத்தரப் பிரதேசத்தில் சொத்தில் பங்கு கிடைக்காத ஆத்திரத்தில் தந்தை மற்றும் 2 சகோதரிகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரிஜ்பால்(60). இவரது மனைவி சசிபிரபா. இவர்களுக்கு அமர் என்ற மகனும் ஜோதி(25) மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்களும் இருந்தனர். அமர் நடவடிக்கைகள் சரியில்லாததால், 2 மாதங்களுக்கு முன்பு சொத்துப் பத்திரத்தில் இருந்து அவரது பெயரை பிரிஜ்பால் நீக்கியுள்ளார். இதனால் தனது தந்தை மீது அமருக்கு கோபம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தனது தந்தை மற்றும் 2 சகோதரிகளை அமர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் ஜடாவுன் கூறுகையில்," சசிபிரபா என்பவர் திங்களன்று காலை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஞாயிறன்று உறங்கிக் கொண்டிருந்த தனது கணவர், 2 மகள்களை மகன் அமர் கத்தியால் குத்தியுள்ளார்.. தடுக்க முயன்ற தன்னையும் கொலை செய்ய விரட்டியுள்ளார். அவர் தப்பியோடி அருகில் இருந்தவர்களை அழைத்து வந்த போது கணவர், 2 மகள்கள் உயிரிழந்ததாக தெரிவித்தார். தப்பியோடி அவரது மகன் அமரைத் தேடி வருகிறோம்" என்றார். கொலை செய்யப்பட்ட மூவரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அமரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in