உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில் தாமதம்; சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் போராட்டம்!

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில் தாமதம்; சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் போராட்டம்!
Updated on
1 min read

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தாமதமாகி வருவதால், பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண் சரிவு ஏற்பட்டு சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மண் சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது. தொழிலாளர்களை மீட்க மீட்பு பணியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வெளிவரும் பாதையை தயார் செய்வதற்காக இடிபாடுகளை துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், மேலிருந்து மண் சரிந்ததால் சிக்கிக் கொண்ட நிலையில், மீட்புப் பணிகள் தாமதமாகி வருகிறது.

இதனால், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். மாநில டிஜிபி அசோக் குமார் கூறுகையில், ‘‘உள்ளே சிக்கி இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறோம். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in