பாய்ந்தது வழக்கு - கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் சிக்கினார்கள்!

பாய்ந்தது வழக்கு - கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் சிக்கினார்கள்!

சென்னையில் தீபாவளி பண்டிகையின் போது நேரக்கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகம் முழுவதும் 280 தீ விபத்துகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருந்தது. சென்னையில் நேரக்கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதுபோல், தீபாவளிப் பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் சென்னையில் மட்டும் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன எனத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துகளில் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீபாவளி முடிந்த நிலையில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in