பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது

பத்திரப் பதிவு அலுவலகம்
பத்திரப் பதிவு அலுவலகம்பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது
Updated on
1 min read

பத்திரப் பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்தக் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா விடுத்துள்ள அறிக்கையில், “ரசீது ஆவணத்திற்கான பதிவுக்கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் பத்தாயிரம் என்று இருந்தது. இந்தக் கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் நாளைமுதல் அமலுக்கு வருகின்றன ” என்று கூறப்பட்டு உள்ளது.

பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை. இந்நிலையில் தான் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in