இந்தியாவில் குறையும் கரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் குறையும் கரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு
கரோனா பரிசோதனை Hindu கோப்பு படம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் அதே நேரத்தில், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,188 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 67 ஆயிரத்து 597 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா பாதிப்பால் ஒரே நாளில் 1,188 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,02,874 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,80,456 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,40,658 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது 9,94,891 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,70,21,72,615 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 55,78,297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in