விவசாயிகளின் நலனுக்காக 25 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு:  தானியங்கி வானிலை நிலையங்கள், மழைமானிகள் நிறுவ ஏற்பாடு

விவசாயிகளின் நலனுக்காக 25 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு: தானியங்கி வானிலை நிலையங்கள், மழைமானிகள் நிறுவ ஏற்பாடு

தமிழகத்தில் 100 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்களும், 1,400 மழைமானிகளும்  நிறுவ அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக அரசு, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் மூலம் தமிழகத்தின் அனைத்து வட்டாரங்களிலும் தானியங்கி வானிலை நிலையங்களை  நிறுவியது. இதன் மூலம் அவ்வப்போது பெறப்பட்ட வானிலை தரவுகளின் அடிப்படையில் வானிலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணையதளத்தின் வாயிலாக வெளியிட்டு வருகிறது.

தற்போது, தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில் நிறுவப்பட்டுள்ள 250 வானிலை தானியங்கி நிலையங்களில் இருந்து வானிலை தரவுகள் பெறப்படுகிறது. இதில், 35 வட்டாரங்களில் உள்ள வானிலை தானியங்கி நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றன. மீதமுள்ள 100 வட்டாரங்களில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக புதிய வானிலை தானியங்கி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

அதன்படி, தமிழகத்தில் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 1,400 தானியங்கி மழை மானியை பல்வேறு பகுதிகளில் நிறுவதற்கு தமிழக அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இவற்றின் வாயிலாக விவசாயிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்ள இயலும்.  அதற்கேற்ப வேளாண் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தியை பெருக்கி தன்னிறைவை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது  என தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in