ரேஷன் கடைகளில் அக்.6 முதல் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ரேஷன் கடைகளில் அக்.6 முதல் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அக்.6-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " அக்டோபர் 6-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்.

ரேஷன் கடைகளில் அரிசி வாங்க மக்களே கட்டாயப்படுத்தக் கூடாது. ,அரிசி வாங்கவில்லை என்றால் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மக்களை பயமுறுத்தக் கூடாது. அரிசி வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது. இதன் மூலம் தேவையானவர் மட்டும் அரிசி வாங்க முடியும் இதனால் அரிசி கடத்தலையும் தடுக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் நாம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி வருகிறோம். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் அச்சமின்றி அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வட்டி குறைக்கப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in