900 ரூபாய் கடனைக் கேட்டவர் தலையில் கல்லைப்போட்டு கொலை: நடுரோட்டில் நடந்த பயங்கரம்

 900 ரூபாய் கடனைக் கேட்டவர் தலையில் கல்லைப்போட்டு கொலை: நடுரோட்டில் நடந்த பயங்கரம்

தான் கொடுத்த 900 ரூபாய் கடனைத் திருப்பிக் கேட்டவரின் தலையில் பாறாங்கல்லைப் போட்டுக் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நூரி பந்தலகுடா பகுதியைச் சேர்ந்தவர் சிவன்(40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூவிடம் சில நாட்களுக்கு முன் 900 ரூபாயைக் கடனாக கொடுத்தார். இந்த தொகையை நீண்ட நாட்களாகியும் ராஜூ திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு கடனைத் திருப்பி வாங்க சிவன் சென்றுள்ளார். அப்போது பெல்லி தர்கா சாலை அருகே திறந்த வெளி சாலையில் அமர்ந்து ராஜூ, அவரது மனைவி சுஜாதா மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து சிவன் மது அருந்தினர்.

அப்போது தான் கடனாகக் கொடுத்த ரூபாயைத் திருப்பிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சிவன் மீது பாறங்கல்லைத் தூக்கி ராஜூ, போட்டார். இதில் தலைச் சிதறி சிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த சந்திராயன்குட்டா காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று சிவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ராஜூவை கைது செய்தனர். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டவரை பாறாங்கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in