காவல் துறையால் ஏற்படும் மரணங்கள்: இழப்பீட்டுத் தொகை 7.50 லட்சமாக அதிகரிப்பு

காவல் நிலைய மரணங்கள்
காவல் நிலைய மரணங்கள்காவல் துறையால் ஏற்படும் மரணங்கள்: இழப்பீட்டுத் தொகை 7.50 லட்சமாக அதிகரிப்பு

காவல் துறையினரால் ஏற்படும் மரணங்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.7.50 லட்சமாக உயத்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அரசு இதனை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவல்துறை மரணங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான புகார்கள் குறித்து, அரசு மட்டுமின்றி தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகின்றன. இதுபோன்ற காவல் மரணம், காவல்துறையினர் நடத்தும் துப்பாக்கிசூட்டில் உயிரிழப்போருக்கு தமிழ்நாடு அரசு ரூ.5லட்சம் இழப்பீடு வழங்கி வருகிறது. இதை உயர்த்தி வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசை வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், காவல் நிலைய மரணங்களில் உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கான தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாகவும், காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்படுபவர்களுக்கான தொகையும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாகவும், காவலர்களால் உடல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட உள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அரசு இதனை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in