சிக்கிம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு...142 பேர் கதி?

சிக்கிம் வெள்ளம்
சிக்கிம் வெள்ளம்

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. 142 பேரை மீட்புப்படை வீரர்கள் தேடிவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்த கிராமம்
சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்த கிராமம்

சிக்கிம் மாநிலத்தில் அக்.3-ம் தேதி திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதன் காரணமாக லோனெக் ஏரியின் கரைகள் சேதமாகி தீஸ்டா ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் வெள்ளத்தில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1,200- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 13 பாலங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதுவரை 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6,875 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 22 நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது.

வெள்ளம் வடிந்த பின் சிக்கிம்
வெள்ளம் வடிந்த பின் சிக்கிம்

இந்த நிலையில் சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் காணாமல் போன 142 பேரை தேடும் பணி இன்னும் நடந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 23 பேர் ராணுவ வீரர்கள்.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய நிதி பங்கில் இருந்து சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.44.8 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய அமைச்சர்கள் குழுவும் மாநிலத்திற்கு வரவுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக ரூ.4 லட்சமும், முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பிரேம் சிங் தமாங் வெளியிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in