கரோனா: 5 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு; 3-வது இடத்தில் இந்தியா

கரோனாவால் உயிரிழந்தவர்
கரோனாவால் உயிரிழந்தவர்hindu கோப்பு படம்
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.49 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,00,055 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா தற்போது 3-வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சற்று குறைந்து வருகிறது. ஒரேநாளில் 1,49,394 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,72,433 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் இன்று 1,49,394 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 2,46,674 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று 1,008 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,072 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்து 983லிருந்து 5,00,055 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,35,589 ஆக குறைந்துள்ளது. ஒரேநாளில் 55,58,760 பேர் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 168.47 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 95.39% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.42% ஆக குறைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in