வாலாஜாபாத்தில் பலி எண்ணிக்கை 5 ஆனது; ஊராட்சி மன்றத் தலைவர் கைது: காஸ் குடோனுக்கு சீல்

வாலாஜாபாத்தில் பலி எண்ணிக்கை 5 ஆனது; ஊராட்சி மன்றத் தலைவர் கைது: காஸ் குடோனுக்கு சீல்

காஞ்சிபுரம் பகுதியில் காஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தேவரியம்பாக்கம் பகுதியில் காஸ் சிலிண்டர் குடோன் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து ஒரகடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி திடீரென அந்த குடோன் தீப்பற்றி எரிந்தது. அப்போது குடோனிலிருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிறியதில் ஊழியர்கள், குடோன் அருகே இருந்த பொதுமக்கள், சிறார்கள் உட்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் கடலூரைச் சேர்ந்த ஆமோத்குமார்(26), சந்தியா(21) ஆகியோர் வியாழக் கிழமை உயிரிழந்தனர். சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46) கடந்த வெள்ளிக் கிழமை உயிரிழந்தார். ஏற்கெனவே உயிரிழந்தவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது ஒரகடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த காஸ் சிலிண்டர் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in