தெப்பத்தில் மிதந்த தேரைப் பிரிக்கும் போது தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

தெப்பத்தில் மிதந்த தேரைப் பிரிக்கும் போது தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

தெப்பத் திருவிழா முடிந்த நிலையில், குளத்தில் மிதந்த தேரை பிரிக்க முயன்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் வலங்கைமானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நேற்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி கடைசி ஞாயிறு அன்று இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கரோனா காரணமாகத் தெப்பத்திருவிழா நடைபெறாத நிலையில், நேற்று இரவு தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் மதியம் வெள்ளி வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், இரவில் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தெப்பத் திருவிழா முடிந்த நிலையில் நேற்று இரவு ஏழு ஊழியர்கள் தேரைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்திரமோகன் என்பவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். அவரைக் காணவில்லை என்றதும் அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கிய சந்திரமோகனின் உடலை மீட்டனர்.

தெப்பத்தைப் பிரிப்பதற்கு கோயில் நிர்வாகம் உரிய பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்காததே காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in