குளிக்கும் போது வந்த செல்போன் அழைப்பு: மத்திய அரசு ஊழியருக்கு நேர்ந்த துயரம்

குளிக்கும் போது வந்த செல்போன் அழைப்பு: மத்திய அரசு ஊழியருக்கு நேர்ந்த துயரம்

குளித்துக் கொண்டிருந்த போது வந்த செல்போன் அழைப்பால் ஈரக்கையோடு செல்போனை எடுக்க முயன்ற மத்திய அரசு ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர் பால்பாண்டி. இவர் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்திருக்கிறது. குளியல் அறையை விட்டு வெளியேறிய பால்பாண்டி, ஈரக்கையால் செல்போனை எடுத்து பேச முயன்றுள்ளார்.

சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போதே சுவிட்சை அணைக்காமல் செல்போனை எடுத்ததால், அவர்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் பால்பாண்டி அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த ஆவடி போலீஸார் பால்பாண்டி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். செல்போன் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரத்தைத் துண்டிக்காமல் செல்போன் வெடித்துத் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதுபோல் மின்சாரம் தாக்கியும் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. செல்போன் பயன்படுத்தும் போது உரியப் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்று போலீஸார் கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in