வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர்: கழிவுநீர் கால்வாயில் சடலமாக மிதந்த சோகம்

வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர்: கழிவுநீர் கால்வாயில் சடலமாக மிதந்த சோகம்

சாலையோரம் இருக்கும் கழிவுநீர் ஓடையில் நாகர்கோவிலைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ளது அவ்வை சண்முகம் சாலை. இங்குள்ள கழிவு நீர் ஓடையில் வாலிபர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்துப் பொதுமக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி நவீன்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் கழிவு நீரோடையில் விழுந்ததும், அவர்தான் சடலமாக மிதப்பதும் தெரியவந்தது.

போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இறந்து போனவர் வடசேரி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த ஐயப்பன்(42) என்பது தெரியவந்தது. தூத்துக்குடியில் தங்கி வெல்டிங் வேலை செய்யும் ஐயப்பன் வாரத்திற்கு ஒருமுறையே வீட்டுக்கு வருவது வழக்கம். வேலைக்குச் செல்வதாக வீட்டில் இருந்து சென்றவர் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, போதையில் கழிவு நீரோடையில் விழுந்திருப்பது தெரியவந்தது. ஐயப்பனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் கழிவு நீரோடையில் விழுந்து வாலிபர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in