தேசியக்கொடி பறந்த வீடுகளுக்குள் 6 பேரின் சடலங்கள்: கொலையா என போலீஸார் தீவிர விசாரணை

தேசியக்கொடி பறந்த வீடுகளுக்குள் 6 பேரின் சடலங்கள்:  கொலையா என போலீஸார் தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவி சித்ரா பகுதியைச் சேர்ந்தவர் சகினா பேகம். அவரின் இரண்டு மகள்கள் நசீமா அக்தர், ரூபீனா பானு, மகன் ஜாஃபர் சலீம், உறவினர்கள் நூர் உல் ஹபீப், சாஜத் அகமது ஆகியோரின் சடலங்கள் இரண்டு வீடுகளில் இன்று கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேரின் சடலங்கள் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களின் உடல்களில் துப்பாக்கிக்குண்டு காயம் ஏதுமில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இறந்ததன் பின்னணியில் தீவிரவாதிகள் சதி உள்ளதா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சடலங்கள் கிடந்த இரண்டு வீடுகளின் மேற்கூரையிலும் தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in