அரசு மருத்துவமனை குப்பையில் கிடந்த இறந்துபோன பெண் குழந்தை: நடந்தது என்ன?

அரசு மருத்துவமனை குப்பையில் கிடந்த இறந்துபோன பெண் குழந்தை: நடந்தது என்ன?

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குப்பையில் இறந்த நிலையில் பெண் குழந்தை கிடந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டு குழந்தை பேறு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மருத்துவமனையில் சராசரியாக தினமும் 15க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில் இன்று காலையில் மகப்பேறு பிரிவு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. தூய்மைப்பணிக்காக வந்த மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதிலும் அந்த பெண் குழந்தை ஒரு கட்டைப் பையில் வைக்கப்பட்டு இருந்தது. உடனே இதுகுறித்து மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், சின்னமலையூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்- லெட்சுமி தம்பதியின் குழந்தை எனத் தெரியவந்தது. லெட்சுமிக்கு குறை பிரசவத்தில் இறந்தே பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், மருத்துவமனையிலேயே குப்பைத் தொட்டியில் வீசி சென்றுள்ளனர் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவர்களை அழைத்து அவர்களிடம் குழந்தையின் உடலைக் கொடுத்து முறைப்படி அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தினர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in