புதிய முயற்சி... ஏஐ செய்தி தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது 'டிடி கிசான்'

'டிடி கிசான்' தொலைக்காட்சியில் ஏஐ தொழில்நுட்பம்
'டிடி கிசான்' தொலைக்காட்சியில் ஏஐ தொழில்நுட்பம்
Updated on
2 min read

அரசு நடத்தும் டிடி கிசான்' தொலைக்காட்சி சேனல் இரண்டு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொகுப்பாளர்களை (ஏஐ கிரிஷ், ஏஐ பூமி) வரும் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்த உள்ளது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் கடந்த 2015ம் ஆண்டு முதல் 'டிடி கிசான்' என்ற விவசாயிகளுக்கான பிரத்யேக சேனலை நடத்தி வருகிறது. 9 ஆண்டுகால பயணத்துக்குப் பிறகு 'டிடி கிசான்' தொழில்நுட்ப புதுமைகளை அரவணைக்க துவங்கியுள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செய்தி தொகுப்பாளர்களை தனது நிகழ்ச்சியில் பயன்படுத்த உள்ளது.

ஏஐ செய்தி தொகுப்பாளர்கள் (மாதிரி படம்)
ஏஐ செய்தி தொகுப்பாளர்கள் (மாதிரி படம்)

அதன்படி, 'ஏஐ கிரிஷ்’, 'ஏஐ பூமி' ஆகிய இரண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை 'டிடி கிசான்' சேனலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 'டிடி கிசான் மே 26 அன்று இந்திய விவசாயிகள் மத்தியில் புதிய தோற்றம் மற்றும் ஸ்டைலுடன் வர உள்ளது. அன்று சேனலின் விளக்கக்காட்சி புதிய அவதாரத்தில் இருக்கும்.

ஏஐ சகாப்தத்தில், தூர்தர்ஷன் கிசான் நாட்டின் முதல் அரசு தொலைக்காட்சி சேனலாக மாறப்போகிறது. அன்று அனைவரது பார்வையும் ஏஐ தொகுப்பாளர்கள் மீது இருக்கப் போகிறது. காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை நாட்டின் அனைத்து மாநில விவசாயிகளும் இதனைப் பார்க்க முடியும்.

ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம்

இந்த ஏஐ தொகுப்பாளர்கள் தேசிய மற்றும் உலக அளவில் நடக்கும் விவசாய ஆராய்ச்சிகள், விவசாயத்தின் போக்குகள், மண்டிகள், வானிலை நிகழ்வுகள், அரசு திட்டங்களின் தகவல்கள் போன்ற தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவார்கள். ஏஐ செய்தி தொகுப்பாளர்களால் சோர்வடையாமல் 24 மணி நேரமும் 365 நாட்களும் செய்திகளை வாசிக்க முடியும்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in